பிரதமரின் ஏகப்பட்ட கடனுதவி திட்டத்தின் வாயிலாக விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்தியாவில் உள்ள நெசவாளர்கள், பொற்கொல்லர்கள் உள்ளிட்ட பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் விஸ்வகர்மா யோஜனா என்னும் திட்டம் துவங்கப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்த திட்டத்தின் வாயிலாக கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக 5 சதவீத வட்டியுடன் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதற்கட்டமாக தொழிலாளிகள் ஒரு லட்சமும், இரண்டாம் கட்டமாக ரூ. 2 லட்சம் வரையிலும் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த திட்டத்திற்காக ரூ. 13 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏழைத் தொழிலாளர்களின் தொழிலை விரிவாக்கும் வகையில் இந்த கடனுதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப் படுவார்கள்.
முதற்கட்டமாக, பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்களைச் செய்பவர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள்.
- தச்சர்
- பொற்கொல்லர்
- குயவர்
- சிற்பிகள், கல் தச்சர்கள்
- காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர்
- கொத்தனார்
- கூடை/ பாய்/ துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு செய்பவர்
- பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர்
- முடி திருத்தும் தொழிலாளர்
- பூமாலைகள் கட்டுபவர்
- சலவைத் தொழிலாளர்
- தையல்காரர்
- மீன்பிடி வலை தயாரிப்பவர்
- படகு தயாரிப்பவர்
- கவசம் தயாரிப்பவர்
- இரும்புக் கொல்லர்
- சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள்
- பூட்டுகள் செய்பவர்கள்