HomeBlogபாசன வேளாண் திட்டத்தில் மானியத்தில் விதைகள்

பாசன வேளாண் திட்டத்தில் மானியத்தில் விதைகள்

பாசன வேளாண்
திட்டத்தில் மானியத்தில் விதைகள்

பாசன
வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட
விவசாயிகளுக்கு மானிய
விலையில் பயறு வகை
மற்றும் குறுந்தானிய விதைகள்
வழங்கப்படுகின்றன.மாவட்ட
வேளாண்மை துறை சார்பில்
விதைப்பண்ணை அமைக்கப்பட்டு நெல்,
பயறு வகை, குறுந்தானியம் மற்றும் எண்ணெய் வித்து
விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு தரமான விதைகளாக விற்கப்படுகின்றன. 170 எக்டேரில் நெல்
கோ 51, டி.கே.எம்.
13,
விஜிடி 1, ஆர்.எல்.ஆர்.15048
ரக உற்பத்தி மூலம்
419
டன் நெல், 39 எக்டேரில்
39
டன் சிறுதானியங்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நெல்
ரகம் வெளியிட்டு பத்தாண்டுக்கு மேலானால் ஒரு கிலோ
விதைக்கு ரூ. 18.50, 10 ஆண்டுகளுக்குள் எனில் ரூ. 20 மானியம்
வழங்கப்படுகிறது.

உளுந்து
விதை கிலோ ரூ.97,
பாசிப்பயறு ரூ.99. இதற்கு
கிலோவிற்கு ரூ.48 மானியம்.
தற்போது உளுந்து வம்பன்
6, 8,
ரகத்தில் 12 டன் விதைகள்,
பாசிப்பயறு கோ 8, வம்பன்
4,
.பி.எம்.023
ரகத்தில் 4 டன் விதைகள்
உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வேளாண் விரிவாக்க
மையங்களை அணுகலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular