இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ
சேர்க்கை பிப்.28 வரை
நீட்டிப்பு
இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய
அரசு பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி வாயிலாக
பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ
மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
மா்ணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனவரி
2022 பருவ சேர்க்கைக்கான கடைசி
தேதி பிப்.28 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர
விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in
என்ற இணையதளத்தில் பிப்.28க்குள்
விண்ணப்பிக்கலாம்.
இக்னோவில்
குறிப்பிட்ட சில இளங்கலை
படிப்புகள், டிப்ளமோ மற்றும்
சான்றிதழ் படிப்புகளில் சேரும்
தகுதியுடைய எஸ்சி, எஸ்டி
வகுப்பினருக்கு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மா்ணவர்
சேர்க்கை தொடர்பான விவரங்களை
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை
மண்டல அலுவலகத்தை 044 26618040 என்ற
தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

