HomeBlogமாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த இணைய வழி பயிற்சி

மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த இணைய வழி பயிற்சி

மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த இணைய வழி பயிற்சி

தஞ்சை மத்திய உணவு தொழில்நுட்பம் நிறுவனம் சார்பில், வரும் மார்ச், 1ம் தேதி மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த இணைய வழி பயிற்சி நடக்கிறது.

தஞ்சையில் மத்திய அரசின் உணவு தொழில்நுட்ப நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம், தொழில்முனைவோர், விவசாயிகள், விவசாய கூட்டமைப்புகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்கிறது.அதில் ஒன்றாக, வரும் மார்ச், 1ம் தேதி, மாம்பழத்தை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டுதல் குறித்து இணைய வழி கருத்தரங்கு வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த கருத்தரங்கில், மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் திட்டங்கள், குழு மாம்பழ பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான தொழில்வாய்ப்புகள், அந்நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெறும் வழிமுறைகள் தெரிவிக்கப்படுகிறது.மேலும், சிப்பம் கட்டுதல், பிராண்டு உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சியில், சிறு, குறு உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயிகள், தொழில் துவங்க விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம்.

பயிற்சியில் பங்கேற்க, http://niftem-t.ac.in/odopweb.php
 
என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், தகவல்களுக்கு, தஞ்சை மத்திய உணவு தொழில்நுட்ப நிறுவன அலுவலர்களை, 95911 94179, 97509
68417
ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை பகுதியில் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த பயிற்சியில் பங்கேற்று பலன் பெறலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular