HomeBlogஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
- Advertisment -

ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்

Victims of online fraud can contact this number

ஆன்லைன் மோசடியால்
பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணை தொடர்பு
கொள்ளலாம்

ஆன்லைன்
மூலம் மோசடி நடந்தால்
பாதிக்கப்பட்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் 1930 இந்த
எண்ணை தொடர்பு கொள்ளலாம்
என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

சமீப
காலமாக வங்கியில் இருந்து
பேசுவதாகவும், .டி.எம்
கார்டை புதுப்பிக்க வேண்டும்,
செல்போன் எண்ணிற்கு பரிசு
விழுந்துள்ளது, முகநூல்
மூலம் உதவி கேட்டும்,ஆபாச
வீடியோ லிங்க் மூலம்
பணம் கேட்டு மோசடி
செய்வது என நாள்தோறும் பல்வேறு வகைகளில் மோசடி
நடந்து வருகிறது. இந்நிலையில் படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்களின் மோசடியின்
வலையில் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட
சைபர்கிரைம் கூதல் சூப்பிரண்டு அதிகாரி அருண்குமார் தலைமையில்
காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு துண்டு
பிரசுரங்களையும் வழங்கியுள்ளனர். அப்போது பேசிய அதிகாரிகள், ராமநாதபுரத்தில் இதுபோன்ற
ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை
தடுக்க காவல்துறையினர் தீவிர
விசாரணை நடத்தி வருகிறோம்.

ஆக
யாரேனும் இதுபோன்று பணம்
மற்றும் வங்கி தொடர்பாக
வரும் அழைப்புகள் மற்றும்
குறுந்தகவல்களை உடனடியாக
அதனை நம்பி ஏமாறாமல்
நன்றாக விசாரிக்க வேண்டும்.
மேலும் ஆன்லைன் மூலம்
பண மோசடி செய்தால்
உடனடியாக 1930 என்ற தேசிய
சைபர் கிரைம் எண்ணை
தொடர்பு கொண்டு புகார்
அளித்து விவரங்களை கூற
வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கை
முடக்கி யாரும் பணம்
எடுக்காத வகையில் நடவடிக்கை
எடுக்க முடியும் என
போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம்
மோசடி செய்பவர்களை விரைவில்
பிடிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -