HomeBlogதட்டச்சு சான்றிதழ் கிடைக்காததால் GROUP 2க்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

தட்டச்சு சான்றிதழ் கிடைக்காததால் GROUP 2க்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

தட்டச்சு சான்றிதழ்
கிடைக்காததால் GROUP
2
க்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்

தட்டச்சு,
சுருக்கெழுத்து தேர்வு
எழுதி 5 மாதங்களை கடந்தும்
சான்றிதழ் கிடைக்காததால் GROUP
2
தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல்
மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு 2 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு செப்டம்பரில் 1.5 லட்சம் மாணவர்கள் தட்டச்சு,
சுருக்கெழுத்து தேர்வு
எழுதினர். தட்டச்சு, கணினி
தேர்வுகளை அரசு பணிக்கு
கட்டாயமாக்கியுள்ளது. ஐந்து
மாதங்களை கடந்தும் தேர்ச்சி
அடைந்தவர்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படவில்லை.

பொதுவாக
ஒவ்வொரு தேர்வு முடிந்து
90
நாட்களுக்குள் சான்றிதழ்
வழங்கப்பட வேண்டும் என்பது
விதி.தற்போது தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) GROUP 2 தேர்வு
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான மார்ச் 20 கடைசி
தேதி.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தட்டச்சு,
சுருக்கெழுத்து சான்றிதழ்களின் எண் பதிய வேண்டியுள்ளது. தொழில்நுட்பக் கல்வி
இயக்ககம் நடந்து முடிந்த
தேர்வுக்கான சான்றிதழை விரைந்து
வழங்க வேண்டும் என
தேர்வு எழுதியவர்கள் வலியுறுத்தினர். தட்டச்சு பயிலகங்களும் தேர்வு
எழுதிய மாணவர்களுக்கு பதில்
சொல்ல முடியாமல் தவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular