அரசு கணினி
சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை
அரசு கணினி சான்றிதழ்
தேர்வுக்கு மார்ச் 16ம்
தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்
துள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில்
ஆண்டுதோறும் அரசு கணினி
சான்றிதழ் தேர்வு நடத்தப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக
கடந்த 2 ஆண்டுகளாக இத்தேர்வு
நடத்தப்படவில்லை.
இந்நிலையில், அரசு கணினி சான்றிதழ்
தேர்வு ஏப்.9, 10-ம்
தேதிகளில் நடத்தப்படும் என்று
அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு
பிப்.23-ம் தேதி
முதல் நடைபெற்று வருகிறது.
10ம்
வகுப்பு மற்றும் இளநிலை
தட்டச்சு (ஆங்கிலம் அல்லது
தமிழ்) தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் தனித்தேர்வராகவோ அல்லது ஏதேனும் ஓர்
அங்கீகரிக்கப்பட்ட பயிலகத்தின் வழியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம் மற்றும்
தேர்வுக்கட்டணம் ரூ.530-ஐ
ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும்.
கடந்த
2021-LD ஆண்டு ஏப்ரல் மாதம்
வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி ஏற்கெனவே ஆன்லைனில்
விண்ணப்பித்த தேர்வர்கள் தற்போது மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், அவர்கள்
தேர்வு கட்டணம் செலுத்த
தேவையில்லை. முன்பு தேர்வுக்கட்டணம் செலுத்திய விவரங்களை ஆன்லைன்
விண்ணப்பத்தில் உரிய
தகவல்களுடன் குறிப்பிட வேண்டும்.
ஆன்லைனில்
(www.tndtegteonline.in) விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்
16ம் தேதி ஆகும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய
ஆவணங்களுடன் சென்னையில் உள்ள
தொழில்நுட்பக் கல்வி
இயக்ககத்துக்கு மார்ச்
19க்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களை www.tndte.gov.in என்ற
இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.