HomeBlogதொழில் முனைவோருக்கான மூன்று மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் முனைவோருக்கான மூன்று மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

தொழில் முனைவோருக்கான மூன்று மாத இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

பிரதம
மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ்
தொழில் முனைவோருக்கான இலவச
திறன் மேம்பாட்டு பயிற்சி,
பி.எஸ்.ஜி.,
கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெறுகிறது.

பள்ளிப்படிப்பை கைவிட்டவர்கள், முடித்தவர்கள் மற்றும் சுய தொழில்
செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு, குறுகிய
கால இலவச பயிற்சி
வகுப்புகள் வழங்கப்படுகின்றன.உணவு
பதப்படுத்துதல் மற்றும்
தையல் கலைஞர் ஆகிய
இரு இலவச தொழில்
படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.

பயிற்சிக்காலம் மூன்று மாதம். எஸ்.எஸ்.எல்.சி.,
மற்றும் பிளஸ் 2 படித்திருந்தால் போதும். 15 வயதிலிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.வகுப்புகள் வரும் 14 முதல் துவங்குகிறது. மூன்று மாத கால
இலவச பயிற்சிக்கு பின்,
பல்கலை கழக மானியகுழுவால் சான்றிதழ் வழங்கப்படும்.சுயதொழில்
துவங்க வாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும். பயிற்சிக்கு வருவோருக்கு பயணப்படி வழங்கப்படும்.

மேலும்
விபரங்களுக்கு, 0422-4303333 என்ற
எண்ணில் கல்லுாரியையும், 98940 31295 என்ற
எண்ணில் ஒருங்கிணைப்பாளரையும் தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular