தாட்கோ மூலம்
PVC பைப் வாங்க
விவசாயிகளுக்கு மானியம்
தாட்கோ
மூலம் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின விவசாயிகள், PVC
பைப் மானியம் வாங்க
விண்ணப்பிக்கலாம்.
கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக
அரசின் ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை
‘தாட்கோ‘ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு PVC பைப் வாங்க,
15 ஆயிரம் ரூபாய் மானியமாகவும், புதிய மின் மோட்டார்
வாங்க, 10 ஆயிரம் ரூபாய்
மானியமாகவும் வழங்கப்படுகிறது.விண்ணப்பதாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை
சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
குடும்ப
ஆண்டு வருமானம், 2 லட்சம்
ரூபாய்க்கு மேல் இருக்க
கூடாது.விவசாயத்தை தொழிலாக
கொண்டவராக இருக்க வேண்டும்.
தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத SC., ST.,
விவசாயிகளுக்கும், சிறு,
குறு மற்றும் நடுத்தர
விவசாயிகளுக்கும், துரித
மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஏற்கனவே
தாட்கோ நிலம் வாங்கும்
திட்டம், நில மேம்பாட்டு திட்டம் மற்றும் துரித
மின் இணைப்பு திட்டம்
ஆகிய திட்டங்களில், பயன்
பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
PMKSY-SWMA திட்டத்தில் மின்மோட்டார் மானியம்
பெற்றவர்கள், வேளாண், தோட்டக்
கலைத்துறை திட்டங்களில் மின்
மோட்டார் மானியம் பெற்றவர்கள், இத்திட்டத்தின் கீழ்
மானியம் பெற வழிவகை
இல்லை.
விபரங்களுக்கு, மாவட்ட மேலாளர், தாட்கோ,
டாக்டர் பாலசுந்தரம் ரோடு,
மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
பின்புறம், கோவை என்ற
முகவரியிலும், 0422 2240111 என்ற
எண்ணிலும் அணுகலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர் தங்களின் சாதி சான்று,
வருமான சான்று, குடும்ப
அட்டை, இருப்பிட சான்று,
சிட்டா, பட்டா, அடங்கல்,
அ–பதிவேடு, புலப்பட
வரைப்படம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை தாட்கோ இணைதள
முகவரியில், http://application.tahdco.com/ பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


