முன்னாள் படை
வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும்
31ம் தேதி வரை
அவகாசம்
முன்னாள்
படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும் 31ம் தேதி
வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
இது குறித்து, கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த
கல்வியாண்டுகளில், பிரதமரின்
தொழிற்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும்
குறைவாக உள்ளது.
எனவே,
நடப்பு கல்வியாண்டில், முன்னாள்
படை வீரர்கள், தங்கள்
குழந்தைகளை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இதற்காக,
பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும்
31ம் தேதி வரை
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல்
திருப்பூர் மாவட்ட முன்னாள்
படை வீரர் நல
உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 என்கிற
எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர், இணையதளத்தில், வரும்
31ம் தேதிக்குள், கல்வி
உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்
பெற
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


