HomeBlogநான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் பயிற்சி

நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் பயிற்சி

நான் முதல்வன்
திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் பயிற்சி

நான்
முதல்வன் திட்டத்தில், கல்லூரி
மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மூலம் மாணவர்கள்
வேலைத் தேடும் போது
கூடுதலாக வாய்ப்புகள் கிடைக்கும் என தொழில்திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர்
தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் படிக்கும்
மாணவர்களின் தொழில் திறனை
வளர்க்கும் வகையில்நான்
முதல்வன்திட்டத்தின் மூலம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்கள் படிக்கும்
போதே சான்றிதழ் படிப்பினை
வழங்கவுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும்
உயர்கல்வித்துறையில் படிக்கும்
மாணவர்களின் உயர்கல்வி மற்றும்
வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில்நான் முதல்வன்
திட்டம் மார்ச் 1ஆம்
தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின்
தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு தொழில்திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில்:

தமிழ்நாடு
முதலமைச்சரின் கனவுத்
திட்டமானநான் முதல்வன்
திட்டத்தின் கீழ் அரசுப்
பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும்
மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பள்ளி
மாணவர்களுக்கு உயர்கல்வியில் எந்தப் படிப்புகளை தேர்வுச்
செய்வது, எதிர்காலத்தில் உள்ள
வாய்ப்புகள் குறித்து பள்ளி
மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டுக் கழகத்தின் மூலம்
பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தொழில்திறன் மேம்பாட்டுக் கழகத்தின்
மேலாண்மை இயக்குநர், அதேபோல்
தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி
நிறுவனங்களில் படிக்கும்
மாணவர்களுக்கு வேலை
வாய்ப்பு கிடைப்பதிலுள்ள இடைவெளியை
தவிர்க்கும் வகையில் பயிற்சி
அளிக்கப்படவுள்ளது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும்போதே 6 மாதம் பயிற்சி அதிகப்பட்சமாக 500 மணிநேரம் அளிக்கப்பட முடியும்.
மேலும் இந்தப் பயிற்சியும் தொழிற்சாலைகளுக்கு தேவையான
வகையில் அவர்கள் மூலமாக
பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

தொழில்
திறன் பயிற்சிக்கான சான்றிதழும் அளிக்கப்படும். இதன்
மூலம் மாணவர்களின் பட்டப்படிப்புடன், கூடுதலாக சான்றிதழ்
அளிக்கும் போது, வேலைத்
தேடும் போது கூடுதலாக
வாய்ப்புகள் கிடைக்கும். தொழிற்சாலைக்கு தேவையான திறன்களை பயிற்சியில் அளிக்கப்படவுள்ளதால், தொழில்
நிறுவனங்களும் எளிதில்
தேர்வு செய்வார்கள். தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் தொழில்
திறனை அதிகரித்து, வேலை
வாய்ப்பு உருவாக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular