மாவட்ட மைய நுாலகத்தில் யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில், திருக்குறள் சேர்க்கப்பட்டு இருப்பதால், இதுகுறித்த சிறப்பு வகுப்பு நேற்று நடந்தது. இதுகுறித்து, மாவட்ட மைய நுாலகர் ராஜேந்திரன் கூறுகையில், ”மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில், திருக்குறள் குறித்து அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன.
பாடத்திட்டத்திலும் உள்ளது. அதனால் போட்டி தேர்வுகளுக்கு ஏற்ப, இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களை கொண்டு ஆளுமைத்திறன் மற்றும் நிர்வாகத்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கிட, இந்த வகுப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்றார். இந்த வகுப்பில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.