கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். கல்லுாரி முதல்வர் செந்தில் வினோத் விடுத்துள்ள செய்திகுறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2023-24 கல்வியாண்டின் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கான பி.எட்., இரண்டாண்டு பட்டப்படிப்பிற்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பம் கல்லுாரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பம் இன்று முதல் அடுத்த மாதம் 4ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்த விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தேவையான நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்பிக்கலாம்.
இந்த பி.எட்.,படிப்பின் சேர்க்கைக்கான கல்வி தகுதிகள், கட்டண விபரம் ஆகியவற்றை www.ccepdy.in என்ற இணைய முகவரியில் அல்லது அனைத்து அலுவலக நாட்களில் கல்லுாரியில் நேரில் அணுகி தகவல் பெறலாம். தகுதியுள்ள பிற மாநிலத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். புதுச்சேரியை சார்ந்த மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு காலியிடம் இருப்பின் பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் நிபந்தனைக்குட்பட்டு பரிசீலிக்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.