இலவச சமஸ்கிருத
பயிற்சி
சமஸ்கிருத
மொழி இலவச பயிற்சியில் சேர திருச்சியில் மார்ச்
27 ஆம் தேதி சோக்கை
முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து சமஸ்கிருத பாரதி, தென்தமிழக செயலா் முரளி வெங்கடகிருஷ்ணன் தெரிவித்தது:
சமஸ்கிருத
பாரதி என்ற அரசு
சாரா அமைப்பு, சமஸ்கிருத
மொழி நடைமுறை பேச்சு
வழக்கு மொழியாக அனைத்து
தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், இலவச சமஸ்கிருத
வகுப்புகளை நடத்தி வருகிறது.
அஞ்சல் வழியில் வகுப்பு: அந்த வகையில், 13 வயது
நிரம்பிய அனைவருக்கும் ப்ரவேஸ்
என்ற முதல் நிலை
6 மாத சமஸ்கிருத பாட
வகுப்புகளை அஞ்சல் வழியிலும்
நடத்தி வருகிறது. இதில்
சேர சமஸ்கிருத மொழி
முற்றிலும் தெரிந்திருக்க வேண்டும்
என்ற அவசியமில்லை. அறியாதவா்களும் சோந்து பயிலலாம். இதற்கான
தோவுகள் ஆண்டுதோறும் ஜனவரி
மற்றும் ஜூலை மாத
இறுதியில் நடைபெறும்.
மேலும்,
ஜூலை மாத சுழற்சிக்கான வாராந்திர நேரடி வகுப்புகள் ஏப். 4 முதல் தொடங்கவுள்ளன. ப்ரவேஸ் பாடத்திட்டத்தில் சோவதற்கான
சோக்கை முகாம் சத்திரம்
பேருந்து நிலைய இந்திராகாந்தி கல்லூரி அருகில் தேசிய
கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் மார்ச்
27 ஞாயிற்றுக்கிழமை காலை
10 முதல் பகல் 1 மணி
வரை நடைபெறுகிறது. மேலும்
விவரங்களறியி 94437-22042 என்ற
எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


