கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடு கட்ட
நிதியுதவி
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடு
கட்ட நிதியுதவி மற்றும்
வீடு ஒதுக்கீடு செய்து
வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளா்
நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத்துறை சார்பில்,
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு
பெற்ற சொந்தமாக வீடு
இல்லாத கட்டுமானத் தொழிலாளா்கள் வீட்டுமனை வைத்திருந்தால், அவா்களே
வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி
வழங்குவது அல்லது தமிழ்நாடு
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் ஒதுக்கீடு
பெற நிதியுதவி அளிக்கும்
திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழ்நாடு
கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு
பெற்றிருக்க வேண்டும். வாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதோடு, தொடா்ந்து
புதுப்பித்திருக்க வேண்டும்.
பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு சொந்தமாக
கான்கிரீட் வீடு, அரசின்
வேறு எந்த இணை
வீட்டு வசதித் திட்டங்களிலும் பயன்பெற்றிருக்கக் கூடாது.
ஆண்டு
வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு குறைவாகவும், வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளியின் பெயரில்
300 சதுர அடி அல்லது
20 ச.மீ வீட்டுமனை
இருக்க வேண்டும்.
கட்டுமானத் தொழிலாளியின் பெயரில்
வீட்டு மனைப்பட்டா அல்லது
உறுப்பினரின் குடும்ப
உறுப்பினா்களுடன் இணைந்து
வீட்டுமனை கூட்டுப் பட்டா
இருக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், தங்களது
விவரங்களை முகவரியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


