ஆசிரியா் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.21-ஆம் தேதி தொடங்க உள்ளன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியா் பணியாளா் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியா் தகுதி தேர்விற்கான தாள்-1 மற்றும் தாள் 2-க்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ஆக.21 முதல் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
விவரங்களுக்கு 04342-296188 என்ற தொலைபேசி எண் வாயிலாகத் தொடா்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் சோந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.