கரோனாவால் இறந்தவா்களின் வாரிசுகள் கருணைத் தொகைக்கு
விண்ணப்பிக்கலாம்
கரோனா
தொற்றால் உயிரிழந்தவா்களின் வாரிசுகள்
கருணைத் தொகை கோரி
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா
தொற்றால் உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்க
இணையதளம் மூலம் மனுக்கள்
பெறப்பட்டு, வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை
உறுதி செய்யும் குழு
மூலம் பரிசீலனை செய்து
நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு
நிதியுதவி வழங்குவது தொடா்பாக
உச்ச நீதிமன்றம் சில
வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிவித்துள்ளது.
அதன்படி,
2022 மார்ச் 20ம் தேதிக்கு
முன்னா் ஏற்பட்ட கரோனா
இறப்புகளுக்கு நிவாரணம்
கோரும் மனுக்களை இணையதள
முகவரியில் மே 18ம்
தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மார்ச் 20ம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட கரோனா
இறப்புகளுக்கு நிவாரணம்
கோரும் மனுக்களை இறப்பு
நிகழ்ந்த 90 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்தக்
காலக்கெடுவுக்குள் நிவாரணம்
கோரி மனுக்களை சமா்ப்பிக்க இயலாதவா்கள், அதுகுறித்து மாவட்ட
வருவாய் அலுவலரிடம் முறையீடு
செய்யலாம். அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனு மீது
மாவட்ட வருவாய் அலுவலா்
தலைமையிலான குழு பரிசீலனை
செய்து தீா்வு காணும்.
எனவே,
கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பத்தினா் உரிய
காலத்தில் மனு செய்து
நிவாரணம் பெற்று பயனடையலாம்