மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழு கட்டுப்படுத்தலாம்
மக்காச்சோளம் சாகுபடியில் வரப்பு பயிராக,
சூரியகாந்தி செடிகளை பராமரித்தால், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்,’ என கோவை
வேளாண் பல்கலை., மாணவியர்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உடுமலை
குரல்குட்டை கிராமத்தில், ‘கிராமத்தங்கல்‘ திட்டத்தின் கீழ், கோவை
வேளாண் பல்கலை., மாணவியர்,
விவசாயிகளிடையே விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வகையில், நேற்று, மக்காச்சோளத்தில் படைப்புழு
தாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறை
குறித்து, விளக்கமளித்தனர்.
மாணவியர் பேசியதாவது: மக்காச்சோள சாகுபடியில், படைப்புழுக்கள், செடியின்
குருத்து பகுதியை சேதப்படுத்துகிறது. இலைகள் சுரண்டப்பட்டு, வரிசையாக துளைகள் தென்படும்.
படைப்புழு தாக்குதலை தவிர்க்க,
பயிர் சுழற்சி முறையை
விவசாயிகள் பின்பற்றலாம்.
ஒரே
விளைநிலத்தில், தொடர்ச்சியாக மக்காச்சோளம் சாகுபடி
செய்வதை தவிர்க்க வேண்டும்.சரியான
பருவத்தில், விதைப்பு செய்ய
வேண்டும். கோடை காலத்தில்,
விளைநிலத்தை ஆழமாக உழவு
செய்வதால், படைப்புழுக்களின் முட்டை,
கூட்டுப்புழுக்கள் இறந்து
விடும்.
மக்காச்சோளத்தில், ஊடுபயிராக, உளுந்து,
பாசிப்பயறு மற்றும் துவரை
நடலாம். மேலும், விளைநிலத்தில், வரப்பு பயிராக, தட்டை
பயறு, சூரியகாந்தி, மரவள்ளி
ஆகிய செடிகளை நட்டு
பராமரித்து, படைப்புழு தாக்குதலை
குறைக்கலாம்.
பயிரில்,
படைப்புழுக்கள், தென்பட்டால், உலர்ந்த மண்ணை, எடுத்து,
இலை மடிப்பின் இடுக்குகளில் இட்டு, அழிக்கலாம். ஏக்கருக்கு, 15 இனக்கவர்ச்சி பொறிகளை
வைக்கலாம். ஒரே வகையான
பூச்சிக்கொல்லி மருந்துகளை தொடர்ந்து தெளிக்காமல், வேளாண்துறையின் பரிந்துரைகளை பின்பற்றலாம்.