சென்டாக் எம்.பி.பி.எஸ்.,
கலந்தாய்வு 4ம் தேதிக்கு
ஒத்தி வைப்பு
சென்டாக்
எம்.பி.பி.எஸ்.,
கலந்தாய்வு 4ம் தேதிக்கு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்.,
படிப்புகளுக்கு ஏப்ரல்
2ம் தேதி இறுதி
கட்ட மாப் அப்
கவுன்சிலிங் நடக்கும் என
சென்டாக் கலந்தாய்வு அட்டவனையை
வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று 2ம் தேதி
நடக்க இருந்த எம்.பி.பி.எஸ்.,
கலந்தாய்வினை 4ம்
தேதிக்கு சென்டாக் ஒத்தி
வைத்துள்ளது.
4ம்
தேதி காலை 9 மணிக்கு
என்.ஆர்.ஐ.,
இடங்களுக்கும், 9.30 மணிக்கு
அரசு ஒதுக்கீடு சிறப்பு
இட ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 10 மணிக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 12.30 மணிக்கு
நிர்வாக இடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.