1 முதல் 5ம்
வகுப்பு வரை ஆண்டு
பொதுத்தேர்வு நடைபெறாது
என வெளியான செய்தி
தவறு
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும்
மே.6ம் தேதி
முதல் மே.30ம்
தேதி வரை நடைபெறும்,
11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே.9ம் தேதி
முதல், மே31ம்
தேதி வரை தேர்வு
நடைபெறும். 12ம் வகுப்பு
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே.5ம் தேதி
தொடங்கி மே.28ம்
தேதி முடிவடையும் என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதர வகுப்புகளுக்கான தேர்வு
தேதி குறித்து பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை
வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 6-9ஆம்
வகுப்புகளுக்கு மே
5ஆம் தேதி முதல்
13ஆம் தேதி வரை
ஆண்டு இறுதித் தேர்வுகள்
நடைபெறும்.
9ஆம்
வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மே 2 முதல்
4 வரை நடைபெறும். 6-9ஆம்
வகுப்புகளுக்கான தேர்வு
முடிவுகள் 30ம் தேதி
வெளியிடப்படும்.
நடப்பு
கல்வியாண்டுக்கான இறுதி
வேலை நாள் மே
13ஆம் தேதி ஆகும்.
2022-2023ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13ஆம் தேதி
தொடங்கும். அதேசமயம் 11ஆம்
வகுப்புக்கு மட்டும் ஜுன்
24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,
1 முதல் 5ம் வகுப்பு
வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான
செய்தி தவறு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்
விளக்கம் அளித்துள்ளார்.