வீடு கட்ட
நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பலன்பெற கட்டுமானத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் – ஈரோடு
சொந்த
வீடு கட்ட நிதியுதவி
வழங்கும் திட்டத்தில் பலன்பெற
கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய
உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தொழிலாளா்
நலத்துறை சார்பில் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு
பெற்ற சொந்த வீடு
இல்லாத கட்டுமானத் தொழிலாளா்களுக்கு சொந்தமாக வீட்டுமனை
வைத்திருந்தால் வீடு
கட்டிக்கொள்ள நிதியுதவி
வழங்கப்படும்.
தவிர
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே
கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற
நிதியுதவி அளிக்கும் திட்டமும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடு
கட்டும் திட்டத்தில் ரூ.
4 லட்சம் வரை நிதியுதவி
வழங்கப்படும்.
கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு
செய்து 3 ஆண்டுகளுக்கு மேல்
தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
சொந்த வீட்டுமனை வைத்திருந்தால் 300 சதுரடி அல்லது 28 சதுர
மீட்டா் அளவில் வீடு
கட்ட இடவசதி இருக்க
வேண்டும்.
நகா்ப்புற
வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற
ரூ.4 லட்சம் வரை
நிதியுதவி பெறலாம்.
பதிவு
பெற்ற கட்டுமானத் தொழிலாளி
அல்லது அவரது குடும்ப
உறுப்பினா்களுக்கு சொந்த
கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது.
நிலத்தின்
உரிமைக்கான பட்டா முறையாக
பெற்றிருக்க வேண்டும். தகுதியானவா்கள் ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்
என்ற இணைய தளம்
மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய
பதிவு அட்டை, ஆதார்
அட்டை, குடும்ப உறுப்பினா்களின் ஆதார் அட்டைகள், ரேஷன்
அட்டை, வாக்காளா் அடையாள
அட்டை, வங்கிக் கணக்கு
புத்தக நகல், ஒரு
புகைப்படம், வருமான வரிச்சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய
வேண்டும்.
மேலும்
விவரங்களுக்கு ஈரோடு,
சென்னிமலை சாலை, அரசு
ஐடிஐ பின்புறம் உள்ள
ஒருங்கிணைந்த தொழிலாளா்
துறை அலுவலக கட்டட
வளாகத்தில் இயங்கும் தொழிலாளா்
உதவி ஆணையா் (சமூக
பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரில் அல்லது 0424 2275592
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்புகொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


