மானிய விலையில்
விதைகள்
–
வேளாண் துறையினர் அழைப்பு
ஒன்றியத்தில், சிறுதானியங்கள் பயிரிட
விரும்பும் விவசாயிகள், 50 சதவீதம்
மானியத்தில் விதைகளை பெறலாம்
என, வேளாண் துறையினர்
அழைப்பு விடுத்துள்ளனர்.திருத்தணி
ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில், மொத்தம் 228 குக்கிராமங்கள் உள்ளன.
இதில்
பெரும்பாலானோர் விவசாயம்
செய்து வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி வேளாண் விற்பனை
நிலையம் மூலம் ‘கோ
– 51′ விதை நெல், மற்றும்
சிறுதானியங்களான கேழ்வரகு,
உளுந்து போன்ற விதைகள்
மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இது குறித்து வேளாண் விற்பனை நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது,
சிறுதானியமான கேழ்வரகு,
ஒரு கிலோ 60 ரூபாய்
ஆகும். இதில் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியம் போக,
30 ரூபாய்க்கு விதைகள் வழங்கப்படுகின்றன.அதே போல்,
உளுந்து, ஒரு கிலோ
97 ரூபாய் ஆகும். இதில்,
விவசாயிகளுக்கு, ஒரு
கிலோ, 48 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
மானிய
தொகைக்கு பதில், விதைகளுக்கு அடி உரம் இலவசமாக
வழங்கப்படும்.சிறுதானியங்கள் இருப்பு உள்ள வரை
மட்டுமே விற்பனை செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


