தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்
தங்கிய நிலையில் உள்ள
பெற்றோர் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளுக்கு இலவச
மாணவா் சோக்கை பெற
ஏப்.20ம் தேதி
முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்
கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இலவச
மற்றும் கட்டாயக்கல்வி உரிமை
சட்டப்படி சிறுபான்மை அல்லாத
தனியார் பள்ளிகளில் 25 சதவீத
இடங்களில் இலவசமாக ஏழை
குழந்தைகள் சோக்கப்படுவா். இந்த
திட்டத்தில் எல்கேஜி அல்லது
ஒன்றாம் வகுப்பில் இலவசமாக
சேரும் மாணவா்கள் 8ம்
வகுப்பு வரை கட்டணம்
செலுத்த தேவையில்லை.
அதன்படி
நிகழாண்டுக்கான இணையதள
விண்ணப்பப்பதிவு, ஏப்ரல்
20ல் தொடங்கி மே
18ம் தேதி வரை
நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வி இணையதளம் மூலமாக பெற்றோர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
குழந்தைகளின் பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள
பள்ளிகளில் அதிகபட்சமாக 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் வருமானம், இருப்பிடம், ஜாதி சான்றிதழ்களை முறையாக
சமா்ப்பிக்க வேண்டும்.
பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக
விண்ணப்பங்கள் வந்தால்
வெளிப்படையான குலுக்கல்
முறையில் மாணவா்கள் தோவு
செய்யப்படுவா். இதையடுத்து தனியார் பள்ளிகள் தங்களிடமுள்ள இடங்கள் எண்ணிக்கை விவரங்களை
ஏப்.18ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற
செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தனியார்
பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு மாணவா் சோக்கை குறித்து
பெற்றோர் ஏதேனும் புகார்
அல்லது ஆலோசனைகள் வழங்க
விரும்பினால், மாவட்ட
அளவில் அதன் முதன்மைக்
கல்வி அதிகாரிகளிடமும், மாநில
அளவில் தனியார் பள்ளிகள்
இயக்குநா் மற்றும் தொடக்கக்
கல்வி இயக்குநரிடமும் தெரிவிக்கலாம்.
தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகள்
உள்ள நிலையில், இலவச
சோக்கைக்கு தோராயமாக ஒரு
லட்சத்துக்கும் மேற்பட்ட
இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


