கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு: Apply @ tnuwwb.tn.gov.in
தமிழ்நாடு
கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி
உதவி அளிக்கும் திட்டத்தில் பயன்பெறுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பூர் கலெக்டர் வினீத் அறிக்கை:
தமிழ்நாடு
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்று, சொந்தமாக
வீடு இல்லாத கட்டுமான
தொழிலாளர்கள், சொந்தமாக
வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்
கொள்ள நிதி உதவி
வழங்கப்பட உள்ளது.
மேலும்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட
மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே
கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற
நிதியுதவி அளிக்கும் திட்டமும்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில், 4 லட்சம் வரை நிதியுதவி
அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற நலவாரியத்தில் பதிவு
பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல்
தொடர்ந்து புதுப்பித்து இருக்க
வேண்டும். சொந்தமாக வீட்டுமனை
வைத்திருக்க வேண்டும்.
அதேபோல்,
குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக
கான்கிரீட் வீடு இருக்கக்கூடாது. மத்திய, மாநில அரசின்
இலவச வீட்டு வசதி
திட்டத்தில் பயன்பெற்றிருக்க கூடாது.
ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள், வாரிய உறுப்பினர் பதிவு
அட்டை, ஆதார், குடும்ப
உறுப்பினர்கள் ஆதார்,
ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள
அட்டை, வங்கி கணக்கு
புத்தக நகல், போட்டோ,
வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் https://tnuwwb.tn.gov.in/
என்ற இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


