கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, 5 முதல், 16 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு, நாளை (17ம் தேதி) ஒரு நாள் ஓவியப்பயிற்சி அளிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் ஏப்., 15 அன்று உலக ஓவிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கலை பண்பாட்டுத்துறை சார்பில், ஓவியப்பயிற்சி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, நாளை (17ம் தேதி) மலுமிச்சம்பட்டி மண்டல கலை பண்பாட்டு மைய வளாகத்தில், காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஓவியப்பயிற்சி முகாம் நடக்கிறது.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
சிறந்த ஓவியர்கள் கலந்துகொண்டு, ஓவிய முறை குறித்த செயல்முறை விளக்கம், பயிற்சி அளிக்கின்றனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, 5 முதல், 16 வயது வரையிலான ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். விபரம் வேண்டுவோர், ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை, 99421 47516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, கோவை கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.