கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சர் பயிற்சி வகுப்பு 19ம் தேதி முதல் துவங்குகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்பு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வரும் 19ம் தேதி முதல் துவங்குகிறது.
12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் 1,416 ரூபாய். கட்டணத்தை அலுவலகலத்தில் செலுத்தலாம்.ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். பயிற்சி ஒரு மணி நேரம். திங்கள் கிழமை விடுமுறை. மகளிருக்கு காலை 9 முதல் 10 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அல்லது 04142–220590, 7401703495 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


