TNPSC
GROUP 4 தேர்வுக்கு வரும் 25 முதல்
இலவச பயிற்சி
TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் இலவச
பயிற்சி, வரும், 25 முதல்
வழங்க உள்ளனர்.
TNPSC GROUP 4ல் V.A.O.,
இளநிலை உதவியாளர், வரி
வசூலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஸ்டோர் கீப்பர்
என, 7,301 காலிப்பணி இடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தேர்வில்
வெற்றி பெற ஏதுவாக,
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டு மையம் சார்பில்
இலவச பயிற்சி வகுப்பு
தன்னார்வ பயிலும் வட்டம்
மூலம் வரும், 25ம்
தேதி முதல் நடத்த
ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசு
துறையில் பணி செய்ய
விருப்பமுள்ள, தகுதி
உள்ள இளைஞர்கள் இந்த
வாய்ப்பை பயன்படுத்தலாம்.கூடுதல்
விபரம் அறிய, மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 0424 2275860 என்ற எண்ணில்
தொடர்பு கொண்டு அறியலாம்.