பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கலாமா என
அதிகாரிகள் ஆலோசனை
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவளின் காரணமாக
தமிழகத்தில் உள்ள எந்த
பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான்
பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது.
தற்போது
கொரோனா தொற்று குறைய
ஆரம்பித்துள்ளதால் மீண்டும்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த இரண்டு
ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் ஏதும்
நடத்தப்படாமல் அனைவரும்
தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
இதனால்
சனிக்கிழமையில் கூட
பள்ளி இயங்கும் காரணத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பெற்றோர்கள் என அனைவருமே
மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சனிக்கிழமை விடுமுறை
விடும்படி அரசுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தரப்பில்
இருந்து கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இதனையடுத்து மே மாதத்தில் இருந்து
சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாமா என
அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக
தகவல் வெளியாகியுள்ளது. கூடிய
விரைவில் இது குறித்தான
அறிவிப்பு வெளியாகும்,