பொதுத்தேர்வு ஹால்
டிக்கெட் – ஆன்லைனில்
Download
செய்து கொள்ளலாம்
பள்ளி
பொதுத்தேர்வு எழுத
உள்ள 10 முதல் 12ம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்
டிக்கெட் வழங்கப்படுகிறது.
கொரோனா
காரணமாக கடந்த இரண்டு
ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே
பள்ளி பொதுத்தேர்வுகள் நடந்த
நிலையில் இந்த ஆண்டு
நேரடி தேர்வாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து பணிகளும்
நடந்து வரும் நிலையில்
பொதுத்தேர்வுகள் மே
மாதம் தொடங்கி ஜூன்
மாதம் வரை நடைபெற
உள்ளன.
அதன்படி
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, மே 5ஆம் தேதியும்,
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும்,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதியும்
தொடங்குகிறது.
இதற்கான
ஹால் டிக்கெட்டுகளை பள்ளி
மாணவர்கள் இன்று மதியம்
2 மணி முதல் பள்ளிக்கல்வித்துறையின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற
தளத்தில் தரவிறக்கம் செய்து
கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.