வேலைவாய்ப்பு பெற
உதவித்தொகையுடன் பயிற்சி
மதுரை:
மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார்
துறையில் வேலைவாய்ப்பு மட்டுமின்றி, உதவித்தொகையுடன் திறன்
மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது என, மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை
வேலைவாய்ப்பு அலுவலர்
கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
மதுரை
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை
வேலைவாய்ப்பு, சுயதொழில்
மற்றும் திறன்மேம்பாட்டு ஆலோசனை
மையம் செயல்படுகிறது.
இதன் பணிகள் குறித்து வேலைவாய்ப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
மாவட்டத்தில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
எவ்விதமான மாற்றுத்திறனாளிக
ள் அதிகம்தோராயமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
மாவட்டத்தில் கை,
கால் செயலிழந்தவர்களே அதிகம்
உள்ளனர்.
அடுத்த
நிலையில் காதுகேளாத, வாய்பேசாதோரும், அதற்கடுத்த நிலையில் பார்வை
குறைபாடு உள்ளவர்களும், அடுத்து
மனவளர்ச்சி குன்றியோரும் உள்ளனர்.இவர்களுக்கு எவ்விதமான உதவியை நீங்கள்
மேற்கொள்கிறீர்கள்மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு தரப்பில் மாவட்ட
மறுவாழ்வு அலுவலர் மூலம்
பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நாங்கள்
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தருகிறோம். சுயதொழில்
பயிற்சி, திறன்மேம்பாட்டு பயிற்சி
அளிக்கிறோம்.இதற்கு கட்டணம்,
சலுகை உண்டாஇல்லை. பயிற்சிகளும், வேலைவாய்ப்பும் இலவசமாகவே
அளிக்கிறோம். எவ்வித கட்டணமும்
கிடையாது.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை
பெற எத்தனை தனியார்
நிறுவனங்களுடன் தொடர்பில்
உள்ளனர்மதுரையில் இருநுாறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரை
தொடர்பில் உள்ளன
உடலியல்
குறைபாடுகளை காரணம்காட்டி மாற்றுத்
திறனாளிகளுக்கு பணிவாய்ப்பை மறுக்கக் கூடாது. இதற்காகவே
‘சமவாய்ப்பு‘ என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம்.
இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள
நிறுவனங்களில் ஒரு
மாற்றுத் திறனாளிகளாவது பணியில்
இருக்க வேண்டும். இவர்களின்
வேலைவாய்ப்புக்காகவே பல்வேறு
நிறுவனங்களுக்கும் ‘விசிட்‘
செய்து வாய்ப்புகளை கண்டறிகிறோம்.
இதுவரை
எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளீர்கள்இந்த அமைப்பு
துவங்கி ஆறுமாதங்களே ஆகிறது.
மாதம்
நான்கைந்து முகாம்களை நடத்தி
வருகிறோம். இதுவரை 200 பேர்
வரை வேலை பெற்றுள்ளனர். இதில் பெண்களைவிட ஆண்களே
அதிகம் உள்ளனர். வேலைவாய்ப்பு வழங்கியதோடு, அதன்பின்பும் தொடர்ந்து
அவர்களை கண்காணிக்கிறோம்.வேலைவாய்ப்பு தவிர என்னென்ன பயிற்சிகளை அளிக்கிறீர்கள்தையல், கம்ப்யூட்டர் பயிற்சி, டூவீலர் மெக்கானிசம், ஆட்டோமொபைல் தொடர்பான பயிற்சிகளை 45 முதல் 60 நாள் பயிற்சி
அளிக்கிறோம்.
இதற்கும்
கட்டணம் எதுவும் கிடையாது.பயிற்சிக்கு வருவோருக்கு வேறு ஏதேனும்
சலுகை உண்டாஆமாம். 60 நாள்
பயிற்சிக்கு வருவோருக்கு உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். 45 நாள் பயிற்சிக்கு வருவோருக்கு வரும் தினமும் ரூ.100
வழங்கப்படும்.வேலைவாய்ப்பு பெற முன்பதிவு செய்ய
வேண்டுமாஆமாம். கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள
எங்கள் அலுவலகத்திலும் பதிவு
செய்யலாம். 86103 26925, 89255 13704ல்
தொடர்பு கொள்ளலாம்.