இயற்கை வேளாண்மைக்கு மண் வளமே அடிப்படை
கிராமப்புற இளைஞர்களுக்கு, இயற்கை
வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
இதில், மண் வளம்
காப்பதே, இயற்கை வேளாண்மையின் அடிப்படை என விளக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட வேளாண்
துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கு, இயற்கை
விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
ஊரக இளைஞர்களுக்கான வேளாண்
திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி முகாம்
நடந்து வருகிறது.
இதில்,
இயற்கை வேளாண்மையின் நோக்கம்,
உற்பத்தி முறைகள், மண்
வள மேம்பாடு, பூச்சி
மற்றும் நோய் கட்டுப்பாட்டு காரணிகள், விதை உற்பத்தி,
மகசூல் மேம்பாடு, விளை
பொருள் விற்பனை, வர்த்தகம்,
ஏற்றுமதி குறித்த அனைத்து
விபரங்களும், தொழில் நுட்ப
வல்லுனர்கள், துறை சார்ந்த
அலுவலர்கள் மற்றும் அனுபவம்
மிக்க விவசாயிகள் விளக்கினர்.மேலும், கேத்தனுார் இயற்கை
வேளாண் விவசாயி பழனிசாமி,
பண்ணையில், களப்பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது, காய்கறி பயிர்களின் இயற்கை வேளாண்மையின் அவசியம்
குறித்தும், இயற்கையின் அங்கமான
மண்வளத்தை பாதுகாப்பதே, இயற்கை
விவசாயத்தின் அடிப்படை
என விளக்கப்பட்டது.மண்
வள மேம்பாட்டிற்கு, பஞ்சகவ்வியம், ஜீவாமிர்தம், அமிர்த கரைசல்
உற்பத்தி முறைகள், மண்
புழுவின் மகத்துவம், மண்
புழு உர உற்பத்தி
முறை, சாறு உறிஞ்சும்
பூச்சி கட்டுப்பாட்டிற்கு இனக்கவர்ச்சி பொறி, விளக்கு பொறி
பயன்படுத்தும் முறை
குறித்து விளக்கப்பட்டது.
இதில், விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து பேசுகையில்:
இயற்கை
விவசாயத்தின் முக்கியத்துவம் அறிந்து, இளைஞர்கள் பின்பற்றுவதோடு, தொழில் நுட்ப அறிவுகளை
மற்றவர்களுக்கும் பகிர்ந்து,
எதிர்கால விவசாயம் இளைஞர்களின் ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் உள்ளது, என்பதை உணர
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


