விவசாயிகள், அங்ககச்
சான்று பெற விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர் மாவட்டத்தில், இயற்கை
விவசாயம் செய்யும் விவசாயிகள், அங்ககச் சான்று பெற
விண்ணப்பிக்கலாம்.
மத்திய
அரசின் தேசிய அங்கக
வேளாண்மை செயல்திட்ட வழிமுறைகளின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் அங்ககச்
சான்றளிப்பு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
விவசாயிகள், 2022 – 2023 ஆண்டிற்கான அங்ககச்
சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, பான் கணக்கு
அட்டை நகல், ஆதார்
அட்டை நகல், பண்ணையின்
பொது விபர குறிப்பு.பண்ணையின்
வரைபடம், மண் மற்றும்
நீர் பரிசோதனை விபரங்கள்,
ஆண்டு பயிர் திட்டம்,
துறையுடனான ஒப்பந்தம், நில
ஆவணம் – சிட்டா நகல்
ஆகியவற்றை மூன்று நகல்களிலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டுடன், சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்களை www.tnocd.net
என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும்,
விபரங்களுக்கு திருவள்ளூர், பெரியகுப்பம், லால்
பகதுார் சாஸ்திரி தெருவிலுள்ள விதைச்சான்று மற்றும்
அங்ககச் சான்று உதவி
இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


