தங்க
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
மத்திய அரசின் பனைப்பொருட்கள் நிறுவனம் (KVIC) சார்பில்,
கோவை ஆர்.எஸ்.புரம். டி.பி.சாலையிலுள்ள ஆடிட்டர் அசோசியேசன் கட்டடத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் 9 முதல் 18ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில், தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்தல், உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மார்க் தரம் அறியும் விதம் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய இரு பாலரும் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள், வங்கிகள், நகை அடகு நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் இரண்டு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ, முகவரிச்சான்று, கல்விச்சான்றிதழ், பயிற்சி கட்டணம் 5,300 ரூபாயுடன்,
18 சதவீதம் ஜி.எஸ்.டி. சேர்த்து ரூ.6,254 செலுத்த
வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 94437 28438 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


