தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம்
தனியார்
பள்ளிகளில் இலவச மற்றும்
கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு, வரும்
25ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2022-2023ம் கல்வி
ஆண்டில் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 சதவீத
இடங்களில் நுழைவு நிலை
வகுப்புகள் (எல்கேஜி, முதல்
வகுப்பு) சேர்வதற்கு கடந்த
20ம் தேதி முதல்
விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
https://rte.tnschools.gov.in/ என்ற
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 25ம் தேதி வரை
நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்புசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வரை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:
பொருளாதாரத்தில் நலிந்த ஏழை, எளிய
குடும்பத்தைச் சேர்ந்த
குழந்தைகளை இலவச மற்றும்
கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தின் கீழ் தனியார்
பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த
திட்டத்தின் கீழ் சேரக்கூடிய குழந்தைகளுக்கு எட்டாம்
வகுப்பு வரையான கல்விக்
கட்டணங்களை மத்திய, மாநில
அரசுகள் வழங்குகின்றன.
அதன்படி
வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன்
பதிவு ஏப்ரல் 20-ம்
தேதி தொடங்கி நடைபெற்று
வருகிறது. இந்தத்திட்டத்தின்கீழ் 1 லட்சத்து
37 இடங்களுக்கு, 16ம் தேதி
வரையில் ஒரு லட்சத்து
15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பம் செய்வதற்கு 18ம்
தேதி கடைசி நாள்
என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும்
25ம் தேதி வரை
கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும்
இலவச கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம் குறித்த
தகவல்களை 14417 என்ற கட்டணமில்லா எண்ணிலும், rtetnqueries@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரியிலும் தெரிந்துக் கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


