SSC தேர்வு மே
24ம் தேதி முதல்
தொடக்கம்
SSC தேர்வு
என்பது தேசிய அளவிலான
தேர்வு ஆகும். இதில்
கலந்துகொள்ள இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.
இதில்,
10, 12 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு வெவ்வேறு
பதவிகளின்படி ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. மேலும்
இந்த SSC என்ற ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வானது வருகின்ற
24ம் தேதி முதல்
தொடங்குகிறது.
அதன்படி
தேர்வானது தென்மண்டலத்தில் இம்மாதம்
24ம் தேதி முதல்
27ம் தேதி வரையிலும்,
மேலும் ஜூன் மாதம்
3ம் தேதி முதல்
10ம் தேதி வரையிலும்
மொத்தமாக 14 நாட்கள் நடைபெற
உள்ளது.
இதையடுத்து தேர்வு நடைபெறும் தேதிக்கு
4 நாட்கள் முன்னதாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். மேலும் சந்தேகங்களுக்கு 044 28251139 என்ற தொலைபேசி
எண் மற்றும் செல்போன்
நம்பர் 9445195946 ஆகியவற்றை தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


