செயின்ட் ஜோசப்
கல்லுாரியில் ஸ்போர்ட்ஸ் கோட்டா வீரர்களுக்கு அழைப்பு
செயின்ட்
ஜோசப் கல்லுாரியில், விளையாட்டு ஒதுக்கீட்டில் சேர
விரும்பும் மாணவியருக்கான தேர்வு
போட்டிகள், ஜூன் 4ல்
நடக்கிறது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும்
மாணவர்களுக்கு ஊக்கம்
அளிக்கும் வகையில், ஒவ்வொரு
ஆண்டும் விளையாட்டு வீரர்
— வீராங்கனையர் தேர்வு
செய்து, ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா‘
அடிப்படையில் ஓ.எம்.ஆரில்
உள்ள செயின்ட் ஜோசப்
கல்லுாரியில், மாணவர்
சேர்க்கை வழங்கப்படுகிறது.அதன்படி,
இந்தாண்டுக்கான வீரர்
– வீராங்கனையர் தேர்வு,
ஜூன் 4ம் தேதி
கல்லுாரி வளாகத்தில் நடக்கவுள்ளது.
தடகளம்,
வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன், செஸ், ஹேண்ட்பால், கோ
–கோ, கபடி போட்டிகள்
நடக்க உள்ளன. மேலும்,
பவர் லிப்ட்டிங், வெயிட்
லிப்ட்டிங், டென்னிஸ், டேபிள்
டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட
போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு மட்டும், கால்பந்து, ஹாக்கி,
பாடி பில்டிங் உள்ளிட்ட
தேர்வுகளும் நடக்கிறது. விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள மாணவ
– மாணவியர் இந்த தேர்வில்
பங்கேற்கலாம்.
விபரங்களுக்கு, 98409 86678 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.