தயார் நிலை
உணவு தயாரிப்பு பயிற்சி
தயார்
நிலை உணவு தயாரிப்பது குறித்து வழங்கப்படும் பயிற்சியில் பங்கேற்க, வேளாண் பல்கலை
அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண்
பல்கலையில், தயார் நிலை
உணவு தயாரித்தல் பயிற்சி
வரும், 24, 25ம் தேதிகளில்
வழங்கப்பட உள்ளது. இரு
தினங்கள் நடக்கும் பயிற்சி
காலை, 9:30 முதல், மாலை,
5:00 மணி வரை நடக்கும்.
ஹெல்த்
மிக்ஸ், கீர் மிக்ஸ்,
தோசை மிக்ஸ், அடை
மிக்ஸ், குளோப் ஜாமூன்
மிக்ஸ், ஐஸ் கிரீம்
மிக்ஸ், டேக்ளா மிக்ஸ்,
தக்காளி சாதம் மிக்ஸ்,
பிசிபெலாபாத் மிக்ஸ்,
சூப் மிக்ஸ், ஹல்வா
மிக்ஸ் உள்ளிட்ட உணவுப்
பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், ரூ.1770, கட்டணத்தை பயிற்சி
முதல் நாளான்று செலுத்த
வேண்டும். அறுவடை பின்சார்
தொழில்நுட்ப மையம், வேளாண்
பொறியியல் கல்லுாரி, ஆராய்ச்சி
நிலையம், வேளாண் பல்கலையில் பயிற்சி நடக்க உள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 0422 6611268
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.