கறவைமாடு வளர்ப்பு
பயிற்சி மே 31ல்
துவக்கம்
கறவைமாடு
வளர்ப்பு குறித்து, தர்மபுரி
குண்டல்பட்டி கால்நடை
மருத்துவ பல்கலை கழக
பயிற்சி மற்றும் ஆராய்சி
நிலையத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி
வழங்கப்பட உள்ளது என,
மையத் தலைவர் கண்ணதாசன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும்,
31 முதல் ஆகஸ்ட் 23ம்
தேதி வரை, 13 வார
காலத்துக்கு கறவைமாடு வளர்ப்பு
குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
வழங்கப்பட உள்ளது. பயிற்சியில், கறவை மாடுகளை தேர்வு
செய்தல், பராமரிப்பு, சமச்சீர்
தீவனம் அளித்தல், கோடையில்
வறட்சியை எதிர்கொள்ளும் வழிமுறைகள், நோய்மேலாண்மை, இனப்பெருக்கம், கன்று பராமரிப்பு, மரபுசார்
மூலிகை மருத்துவம் உள்ளிட்ட
பல்வேறு வளர்ப்பு முறை
குறித்து விளக்கப்பட உள்ளது.
மேலும், பால் உற்பத்தி,
பால்பொருட்களை மதிப்பு
கூட்டுதல் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளன.
விருப்பமுள்ளவர்கள் வரும், 31 க்குள்
குண்டல்பட்டியில் உள்ள
இந்த மையத்தில், 100 ரூபாய்
கட்டணம் செலுத்தி முன்பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும். மேலும்
விபரங்களுக்கு, 04342 288420
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.