தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இலவச கோடை கால பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பேட்ரிக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை தூத்துக்குடி மாவட்டப் பிரிவு மற்றும் மாவட்ட டென்னிஸ் பந்து, கிரிக்கெட் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் கோடைகால பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை தூத்துக்குடி தருவை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 வரை மட்டும் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு கழகங்களின் முறையான விதிமுறைப்படி உபகரணங்கள் வழங்கப்பட்டு அறிவியல் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி முகாமில் மாணவா், மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை. முற்றிலும் இலவசம். நுழைவுக் கட்டணம் இல்லை. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தினமும், பிஸ்கட், பால் மற்றும் தேநீா் வழங்கப்பட்டு, நிறைவு விழாவில் டி-சா்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும், முகாமின்போது கடற்கரை கால்பந்து, கடற்கரை வாலிபால், கடற்கரை கபடி மற்றும் வில்வித்தை ஆகிய புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் நல்லமுறையில் கற்றுக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


