கிராமப்புற இளைஞர்கள், நிப்ட்–டீ கல்லுாரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில், இலவச ஆடை வடிவமைப்பாளர், மெர்ச்சன்டைசர் பயிற்சியில் இணையலாம்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான கிராமங்கள் உள்ளன.
கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளித்து வருகின்றன.இதற்கு தேவையான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்–டீ கல்லுாரி வளாகத்தில், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் இயங்குகிறது.இந்த மையத்தில், மத்திய அரசின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், டி.டி.யு.ஜி.கே.ஒய்., கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.ஆடை வடிவமைப்பாளர் மற்றும் மெர்ச்சன்டைசிங் பயிற்சி, தலா 100 மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.இதற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெறு வருகிறது. ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி ஆறு மாதம் அளிக்கப்படும்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.மெர்ச்சன்டைசிங் பயிற்சி மூன்று மாதம் அளிக்கப்படும்; இதற்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியம்.தங்குமிடம், உணவு, சீருடை, கல்வி உபகரணங்களுடன் முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமப்புற இளைஞர்கள் இப்பிற்சியில் இணையலாம்.பயிற்சி முடிப்போருக்கு, மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, 80563 23111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என நிப்ட்-டீ கல்லுாரி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இப்பயிற்சியை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.