கால்நடை பராமரிப்புத் துறை வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும், இதை யாரும் நம்பவேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: புலனம் என்ற Whatsapp செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிலுள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்ட்டுள்ளதாகவும், இப்பணியிடங்களுக்கு சம்பளம் முறையே ரூ. 15,000, ரூ. 13,000 எனவும், தகுதி, வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு, 90 மணி நேரம் பயிச்சி அளித்து பணிநியமன ஆணை வழங்கப்படும்.
இதற்கான ஆணை வெளியிடப்படும்.விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடலாம். இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 5 பணியிடங்களுக்கு வீதம்) என்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தவறான தகவலாகும். இதன் மூலம் பகிரப்படும் செய்திகள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறைக்கு தொடர்பற்றவை. எனவே, யாரும் இந்த தவறான செயலியை பயன்படுத்த வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


