விவசாயிகளுக்கான சிறப்பு
முகாம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நாளை நடக்க
உள்ள சிறப்பு முகாமில்
விவசாயிகள் பங்கேற்க, வேளாண்
இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை
மாவட்டத்தில், அனைத்து
கிராம ஒருங்கிணைந்த வேளாண்
வளர்ச்சி திட்டத்தின் கீழ்,
ஆனைமலை, அன்னுார், காரமடை,
கிணத்துக்கடவு, மதுக்கரை,
பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு,
சர்க்கார் சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலுார், தொண்டாமுத்துார் ஆகிய
பகுதிகளுக்கு உட்பட்ட,
37 கிராமங்களில், நாளை
சிறப்பு முகாம் நடத்தப்பட
உள்ளது.
வேளாண்,
உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மலைப்பயிர்கள் துறை,
வேளாண் பொறியியல் துறை,
விதைச்சான்று, அங்கக
சான்றளிப்பு துறை உள்ளிட்ட
பல்வேறு துறைகள் முகாமில்
பங்கேற்க உள்ளன.
முகாமில்
பட்டா மாறுதல், சிறு,
குறு விவசாயிகளுக்கு சான்று
வழங்குதல், கால்நடை முகாம்,
பயிர் கடன், கிசான்
அட்டை, ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க
மற்றும் இதர திட்டங்களுக்கான விண்ணப்பம் பெறுதல் ஆகியவை
மேற்கொள்ளப்படும்.எனவே,
விவசாயிகள் இதில் பங்கேற்று
பயனடைய வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


