தாமதம் இல்லாமல்
இனி தனி பட்டா
கிடைக்கும்
சேலம்
– தாமதம் இல்லாமல் இனி
தனி பட்டா கிடைக்க
வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் அனைத்து நிலப்பதிவேடுகளும், ‘டிஜிட்டல்‘
மயமாக்கப்பட்டு நில
நிர்வாக பணி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்காக,
‘தமிழ் நிலம்‘ எனும்,
‘சாப்ட்வேர்‘ பயன்பாட்டில் உள்ளது.
தற்போது பத்திரப்பதிவு துறை
மூலம், பட்டா மாறுதல்
நேரடியாக கிடைத்தாலும், அது,
வி.ஏ.ஓ.,
அலுவலகத்தில், கிராம
கணக்கில் பதிவேற்றம் ஆகாததால்,
ஏகப்பட்ட குளறுபடி ஏற்பட்டு
புகார் மனுக்கள் ஏராளமாக
நிலுவையில் உள்ளன.
அத்துடன்
தனி பட்டா பெற,
சம்பந்தப்பட்ட நிலம்,
மனைகளை சப் டிவிஷன்(உட்பிரிவு)
செய்ய கோரும் மனுக்கள்,
சேலம் மாவட்டத்தில், 45 ஆயிரம்,
தமிழகத்தில், 7.50 லட்சம் மனுக்கள்
நிலுவையில் உள்ளன. இதற்கு
தீர்வுகாண, மாவட்ட அளவில்,
வி.ஏ.ஓ.,க்களுக்கு,
7 நாள் பயிற்சி அளிக்க,
அரசு உத்தரவிட்டது.
அதன்படி,
கடந்த மே, 11 முதல்,
17 வரை, வி.ஏ.ஓ.,க்களுக்கு
தமிழகம் முழுதும் பயிற்சி
அளிக்கப்பட்டது.இதையடுத்து நிலம், மனைகளை உட்பிரிவு
செய்யும் அதிகாரம், விரைவில்,
வி.ஏ.ஓ.,க்களுக்கு
வழங்கப்படுகிறது.
இதன்மூலம்
விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் தவம் கிடந்தவர்களுக்கு, விரைவில்
தனி பட்டா கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வி.ஏ.ஓ.,க்கள் கூறியதாவது:
பட்டா
பெயர் மாற்றத்துக்கு, பத்திரப்பதிவு நடந்த, 15 நாளில் தானாகவே,
பட்டா பெயர் மாறுதலாகி,
உரிமையாளர், சிட்டா நகலை,
ஆன்லைனில் பெறும் வசதி
உள்ளது. ஆனால், அது
வருவாய்த்துறையின், ‘ஆன்லைன்‘
அடங்கல் கணக்கில் பதிவேற்றம் ஆவதில்லை.
அதனால்,
பதிவேற்றம் ஆவதற்கான ஆன்லைன்
வசதி ஏற்படுத்த வேண்டும்.
நிலம் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றத்தில் எதிர்கொள்வது, வி.ஏ.ஓ.,க்கள்
தான். ‘சர்வேயர்‘ கிடையாது.
அதனால்,
வி.ஏ.ஓ.,க்களுக்கு
நில அளவை தொடர்பாக,
7 நாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து உட்பிரிவு
கோரும் மனுக்கள் மீது
நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணி,
முழுமையாக, வி.ஏ.ஓ.,க்களிடம்
விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதை நேர்த்தியாக செய்யவே,
பயிற்சி அளிக்கப்பட்டது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


