TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
பம்புசெட் பழுது
நீக்கும், பராமரிப்பு மையம்
அமைக்க அரசு மானியம் வழங்குகிறது
ராமநாதபுரம் மாவட்ட வேளாண் பொறியியல்
துறை மூலம், வேளாண்
வளர்ச்சி திட்டத்தின் கீழ்
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பம்புசெட் பழுது
நீக்கும், பாரமரிப்பு மையம்
அமைக்க 50 சதவீதம் அரசு
மானியம் வழங்குகிறது.
பம்புசெட்
பழுதுநீக்கும், பராமரிப்பு மையம் ரூ. 8 லட்சம்
செலவில் அமைக்கப்படும். இதில்
50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சம் ரூ.4லட்சம்
வரை மானியம் வழங்கப்படும்.
மையம்
அமைக்க போதிய இடவசதி,
மும்முனை மின்சார இணைப்பு
கொண்ட கிராமப்புற இளைஞர்கள்,
தொழில் முனைவோர்கள், விவசாய
குழுக்கள், உழவர் உற்பத்தி
நிறுவனங்கள் அருகேயுள்ள வேளாண்
பொறியியல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விவரங்களுக்கு ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம்,
ஆர்.எஸ்.மங்கலம்,
திருவாடானை பகுதி விவசாயிகள் – 98659 67063,
பரமக்குடி, நயினார்கோயில், முதுகுளத்தூர், போகலூர், கமுதி, கடலாடி
பகுதி விவசாயிகள் – 75029 79158
ஆகிய உதவிப்பொறியாளர் எண்களையும், ராமநாதபுரம் வேளாண் செயற்பொறியாளரை 94436 27517 எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.