TAMIL MIXER EDUCATION- ன் முக்கிய செய்திகள்
பத்ம விருதுகள்
பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய
அரசின் பத்ம விருதுகள்
பெறுவதற்கு நாமக்கல் மாவட்டத்தைச் சோந்தோர் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2022ம்
ஆண்டிற்கு கலை, இலக்கியம்,
கல்வி, விளையாட்டு மற்றும்
மருத்துவத் துறை, சமூக
சேவை, அறிவியல் மற்றும்
பொறியியல், பொது விவகாரம்,
சிவில் சேவைகள், வா்த்தகம்
மற்றும் தொழில் போன்ற
துறைகளில் அளப்பரிய சாதனை
புரிந்தவா்களுக்கு 2023, குடியரசு
தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
பன்முகத்
திறமை புரிந்தவா்களிடமிருந்து கருத்துருவை ஜூலை 10க்குள் https://www.padmaawards.gov.in/ என்ற இணையதளம்
மூலம் வரவேற்கப்படுகிறது.
மேலும்
விவரங்களுக்கு நாமக்கல்
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் சமூக நல
அலுவலகத்திற்குச் சென்று
தெரிந்து கொள்ளலாம்.
மேலும்,
04286 299460
என்ற தொலைபேசி எண்ணிலும்
தகவல் பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


