TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கைக்கான வழிகாட்டு
நெறிமுறைகள்
தமிழ்நாட்டில், கலை மற்றும் அறிவியல்
கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி,
விண்ணப்பத்திற்கான ஆன்லைன்
பதிவு வரும் 27ம்
தேதி தொடங்கி, ஜூலை
15ம்
தேதி வரை நடைபெறும்
என உயர்கல்வித் துறை
அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி 12ம் வகுப்பு
பொதுத்தேர்வு முடிவுகள்
வெளியாக உள்ள நிலையில்,
கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம்
முழுவதும் உள்ள கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2022-2023ம் கல்வி
ஆண்டில் இளங்கலை மற்றும்
முதுகலை படிப்புகளில் மாணவர்களை
சேர்ப்பதற் கான வழிகாட்டு
நெறிமுறைகளை உயர்கல்வித்துறை செயலாளர்
கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆன்லைன்
பதிவு வரும் 27ம்
தேதி தொடங்கி, ஜூலை
15ஆம் தேதி வரை
நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்:
- 12ம் வகுப்பு
மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி
மாணவர் சேர்க்கை நடைபெறும். - மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை
கடைபிடிக்கப்பட வேண்டும். - மாணவர் சேர்க்கை
பணிகளும், கட்டண விவகாரங்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க
வேண்டும். - மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட வேண்டும்.
- கல்லூரியில் உள்ள
இடங்கள் குறித்த விவரங்கள்
அந்த கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். - ஆன்லைன் விண்ணப்பத்தின்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய
ஆவணங்கள் குறித்த விவரங்களை
இணையதளத்தில் தெளிவாக
வெளியிடப்பட வேண்டும். - இலங்கை தமிழருக்கு ஆன்லைன் மற்றும் பதிவு
கட்டணமாக அரசு மற்றும்
அரசு நிதி உதவி
பெறும் கல்லூரிகளில் 50 ரூபாய்
வசூலிக்கப்பட வேண்டும்
என்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு எந்த
கட்டணமும் வசூலிக்கக் கூடாது. - இலங்கைத் தமிழ்
அகதிகளுக்கான சேர்க்கை
முழுவதும் மெரிட் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்
என்றும் அவர்களின் அடையாள
அட்டையை சரிபார்த்து சேர்க்கை
வழங்கிட வேண்டும். - ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர்
இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில், 30 விழுக்காடு வரை மாணவர்களை சேர்க்கலாம் என்றும் இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம்
மறுக்கப்படக் கூடாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


