TAMIL MIXER EDUCATION- ன் ஓய்வூதியதாரர்களுக்கான செய்திகள்
டிஜிட்டல் ஆயுள்
சான்றிதழ்
வழங்குவதற்கு முக
அங்கீகார
தொழில்நுட்பம்
மத்திய
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை சார்பில், இரண்டு
நாள் வங்கியாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி உதய்பூரில் நடைபெற்றது.
வடமாநிலங்களில் உள்ள பாரத ஸ்டேட்
வங்கி கிளைகளில் ஓய்வூதியதாரர் பிரச்சனைகளை கையாளும் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய பட்டுவாடா
குறித்த கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல்
மயமாக்கல் குறித்து, மத்திய
ஓய்வூதியம் & ஓய்வூதியதாரர் நலத்துறை
அதிகாரிகள், பாரத ஸ்டேட்
வங்கி அதிகாரிகளுக்கு விளக்கி
கூறினர்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஓய்வூதியதாரர் தொடர்பான வருமானவரி மற்றும்
வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல்
முறையில் வழங்குவது குறித்த
சிறப்பு அமர்வுகளும் நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது குறித்து
மத்திய சம்பள கணக்கு
அலுவலகத்தின் தலைமை
கட்டுப்பாட்டு அதிகாரி
(ஓய்வூதியம்), வங்கி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான காரணங்களை பகிர்ந்து
கொண்டனர்.
இந்த
நிகழ்ச்சியின் போது
மத்திய ஓய்வூதியம் & ஓய்வூதியதாரர் நலத்துறை மற்றும் பாரத
ஸ்டேட் வங்கியின் தற்போதைய
இணையதளங்களை ஒருங்கிணைத்து, ஓய்வூதியதாரர்களுக்கு தடையற்ற சேவை
வழங்கும் விதமாக, ஒருங்கிணைந்த இணையதளம் ஒன்றை உருவாக்க
உடனடி முயற்சிகள் மேற்கொள்ள
முடிவு செய்யப்பட்டது.
டிஜிட்டல்
ஆயுள் சான்றிதழ் வழங்குவதற்கு, முக அங்கீகார தொழில்நுட்பத்தை வங்கிகள் பயன்படுத்துவது குறித்து
விரைவாக விளம்பரம் செய்வது
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


