TAMIL MIXER EDUCATION- ன் பொது செய்திகள்
ரேஷன் கடையில்
பணியாற்றும் ஊழியர்கள் பொது
மக்கள் பாராட்டும் வகையில்
பணி மேற்கொண்டால் ஆண்டு
தோறும் ரொக்கப்பரிசு
தமிழகத்தில் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பொது மக்கள்
பாராட்டும் வகையில் பணி
மேற்கொண்டால் அவர்களுக்கு ஆண்டு தோறும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று
அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பொதுவாக
ஒவ்வொரு அரசு மற்றும்
தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக
அவ்வப்போது விருது, பரிசு
உள்ளிட்ட சில சலுகைகள்
அளிக்கப்படுவது உண்டு.
இந்த பரிசுகள் ஊழியர்களை
இன்னும் அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டும்
என்று உற்சாகப்படுத்துகிறது. இதில்
குறிப்பாக, மத்திய மற்றும்
மாநில அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்ற ஊழியர்களை
விட அகவிலைப்படி, பயணப்படி,
வாடகை கொடுப்பனவு, மருத்துவ
காப்பீடு உள்ளிட்ட பல்வேறு
சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
இந்த
நிலையில் பொது மக்கள்
பாராட்டும் வகையில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில சிறப்பு பரிசுகளை
அளிப்பதாக தமிழக அரசு
அறிவித்துள்ளது. அதாவது,
ரேஷன் கடைகளில் சிறப்பாக
பணியாற்றும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாவட்டம் மற்றும்
மாநில அளவில் ஆண்டு
தோறும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த
வகையில் ரேஷன் கடை
விற்பனையாளர்கள் மற்றும்
இடையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.3000 முதல்
ரூ.15,000 வரை இருக்கும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
அறிவிப்பு ரேஷன் கடை
ஊழியர்கள் மத்தியில் மிகுந்த
வரவேற்புகளை பெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த
வாரத்தில், தமிழகம் முழுவதும்
உள்ள அனைத்து ரேஷன்
கடை ஊழியர்களுக்கும் 14% லிருந்து
28% வரை அகவிலைப்படி (DA) தொகையை
அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்த
உயர்வு மூலம் ரேஷன்
கடைகளில் பணிபுரியும் சுமார்
19,658 விற்பனையாளர்கள் மற்றும்
2,852 கட்டுநர்கள் என மொத்தம்
22,510 பணியாளர்கள் பயன் பெற
இருக்கிறார்கள்.