TAMIL MIXER EDUCATION- ன் கல்வி செய்திகள்
UPSC முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு
நடப்பு
ஆண்டுக்கான சிவில் சர்வீஸ்
பணிகள் அடங்கிய 1,011 பதவிகளை
நிரப்புவதற்கான அறிவிப்பு,
கடந்த பிப்.2ம்
தேதி வெளியானது.
நாடு
முழுவதும் 5.5 லட்சம் பேர்
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை
தேர்வு கடந்த 5ம்
தேதி நடந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் www.upsc.gov.in, www.upsconline.nic.in ஆகிய
இணையதளங்களில் நேற்று
வெளியானது.
இத்தேர்வில் நாடு முழுவதும் 13,090 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 610 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். முதல்நிலை
தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தகட்டமாக மெயின்
தேர்வு செப்.16-ம்
தேதி தொடங்குகிறது.