TAMIL MIXER EDUCATION-ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஓசூரில் தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் பங்கேற்க
அழைப்பு
இது தொடர்பாக, ஓசூர் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக
அரசு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை பயிற்சி
பிரிவு மற்றும் மண்டல
திறன் மேம்பாட்டு மற்றும்
தொழில் முனைவு அமைச்சகம்
சார்பில், மாவட்ட அளவிலான
பிரதான் மந்திரி நேஷனல்
தொழிற்பழகுனர் சேர்க்கை
முகாம் நடக்கிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
வரும்,
11ம் தேதி காலை,
9.00 முதல், மாலை, 4.00 மணி
வரை, ஓசூர் அரசு
தொழிற்பயிற்சி நிலைய
வளாகத்தில் முகாம் நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள
பொதுத்துறை மற்றும் தனியார்
முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று,
தொழிற்பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ.,
பயிற்சி பெற்றவர்கள், பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 மற்றும்
டிப்ளமோ, டிகிரி கல்வி
தகுதியுடையவர்களை தேர்வு
செய்ய உள்ளன. என்.சி.வி.டி.,
மற்றும் எஸ்.சி.வி.டி.,
முறையில், அரசு மற்றும்
தனியார் ஐ.டி.ஐ.,யில்
பயிற்சி பெற்று தேர்ச்சி
பெற்ற மற்றும் தேர்ச்சி
பெறாதவர்கள், இறுதியாண்டு தேர்வு
எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து
மாணவர்களும், தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் (என்.ஏ.சி.,)
பெறலாம். மேலும், பத்தாம்
வகுப்பு மற்றும் அதற்கு
மேல் கல்வி தகுதி
உடையவர்கள், நேரடியாக தொழிற்சாலைகளில் பிரெஸ்சர் அப்ரண்டீசாக சேர்ந்து,
3 முதல், 6 மாத கால
அடிப்படை பயிற்சி யும்,
இரு ஆண்டு வரை,
தொழிற்பழகுனர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெற முடியும்.
டிப்ளமோ
மற்றும் டிகிரி கல்வித்
தகுதி கொண்டவர்கள், ஆப்சனல்
தொழிற்பிரிவுகளில் அதிகபட்சம் இரு ஆண்டுகள் வரை,
தொழிற்பழகுனர் பயிற்சி
பெற்று, என்.எஸ்.டி.சி.,
அல்லது எஸ்.எஸ்.சி.,
வழங்கும் அப்ரண்டீஸ் சிப்
சான்றிதழ் பெறலாம்.
இப்பயிற்சிக்கு மாத உதவித்தொகையாக, 8,500 முதல்,
16 ஆயிரம் ரூபாய் வரை
தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும். தொழிற்பழகுனர் பயிற்சி
முடித்து தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, அரசு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் வயது வரம்பில்
மேலும் ஓராண்டு சலுகை
உண்டு. எனவே தகுதியுள்ளவர்கள் தங்களது அசல்
கல்வி சான்றிதழுடன் முகாமில்
பங்கேற்கலாம்.
மேலும்
விபரங்களுக்கு, கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் இயங்கி
வரும் மாவட்ட திறன்
பயிற்சி அலுவலகத்தை நேரிலோ
அல்லது adrichsr110@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலமாகவோ,
63837 03438,
70220 45795, 86101 50766 ஆகிய தொலைபேசி
எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


